பார்சிலோனா பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் அதிரடியாக நீக்கம்

Report Print Kavitha in கால்பந்து
154Shares

கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்த பார்சிலோனா அணியின் தலைமை பயிற்சியாளர் குயிக் சேட்டின் தனது பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கப்பட்டார்.

பார்சிலோனா அணி கடந்த 74 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வியாக பார்க்கப்பட்டது. இந்த தோல்வியினால் அதிருப்தியடைந்த அணியின் நிர்வாகம், பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டினை அதிரடி நீக்கியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து, நெதர்லாந்து அணியின் முன்னாள் வீரர் ரொனால்டு கோமேனை புதிய பயிற்சியாளராக நியமித்தது. ஆனால், அவரும் தனது பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ரொனால்டு கோமேன் பார்சிலோனா பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு முன் “ 2020-21-ம் ஆண்டு கால்பந்து சீசனுக்கு குறிப்பிட்ட சில புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும், மூத்த வீரர் லூயிஸ் சுவாரசை கழற்றி விட வேண்டும்” என்று சில நிபந்தனைகளை விதித்ததாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்