பார்சிலோனா விட்டு வெளியேற மெஸ்ஸி முடிவு..! போராட்டத்தில் குதித்த ரசிகர்கள்

Report Print Basu in கால்பந்து
246Shares

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.

33 வயதான அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி, செவ்வாயன்று பார்சிலோனா கிளப்பிற்கு ஃபேக்ஸ் அனுப்பினார், அவர் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்ய விரும்புவதாகவும், உடனடியாக அணியை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

ஆகஸ்ட் 16 அன்று நடந்த சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனா அணி 8-2 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச்சால் தோற்கடிக்கப்பட்டது.

ஆறு முறை பாலன் டி'ஓர் வென்ற மெஸ்ஸி, 2004 ஆம் ஆண்டில் பார்சிலோனாவுக்காக அறிமுகமானார் மற்றும் நான்கு முறை சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளார்.

மெஸ்ஸியுடனான ஒப்பந்தமானது, கடந்த ஜூன் மாதமே முடிவடைந்துவிட்டதாக பார்சிலோனா கிளப் தரப்பில் சொல்லப்படுகிறது.

அதே சமயம் ஒப்பந்தத்தில் உள்ள விதிகள்படி, 700 மில்லியன் யூரோவுக்கு 2021 ஆம் ஆண்டு சீசன் இறுதி வரை பார்சிலோனாவுக்காக விளையாட மெஸ்ஸி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மெஸ்ஸி வெளியேறுவதாக செய்தி வெளியானதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக ஸ்பெயின் பார்சிலோனாவில் உள்ள Camp Nou மைதானத்திற்கு வெளியே கூடி ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெஸ்ஸி தொடர்பில் முடிவெடுக்க கிளப் வாரியம் விரைவில் கூடவுள்ளது, மெஸ்ஸியை சமாதானப்படுத்தக்கூடிய ஒரே விஷயம் பார்சிலோனா தலைவர் ஜோசப் மரியா பார்டோமியூவின் ராஜினாமா மற்றும் அப்பதவிக்கான முன்கூட்டிய தேர்தல் என்று சிலர் கருதுகின்றனர்.

ஆனால் என்ன இருந்தாலும் மெஸ்ஸி கிளப்பை விட்டு வெளியேற உறுதியாக இருக்கிறார் என கூறப்படுகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்