கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா உறுதி.. சோகத்தில் ரசிகர்கள்

Report Print Kavitha in கால்பந்து
199Shares

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக போர்த்துக்கேய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இவர் அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தன்னைத்தானே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் ரொனால்டோவிற்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து யுவென்டஸ் கிளப் (இத்தாலி) அணிக்காகவும் விளையாடி வரும் ரொனால்டோ அடுத்து வரும் அந்த அணியின் லீக் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்செய்தியை அறிந்த இவரது ரசிகர்கள் பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்