$4.5 மில்லியன் பணத்தை மனைவி திருடியதாக கூறிய மரடோனா! சொந்த மாப்பிள்ளையை மோசமாக திட்டியது ஏன்? அவரின் மற்றொரு முகம்

Report Print Raju Raju in கால்பந்து

மரடோனா - கிளவ்டியா தம்பதிக்கு டால்மா நீரியா மற்றும் ஜியானின்னா டினோரா (31) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் இளைய மகளான ஜியானின்னா, செர்ஜியோ அகுரோ என்ற கால்பந்து வீரரை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் கடந்த 2008ஆம் ஆண்டு ஒரு கால்பந்து தொடரின் போது சந்தித்து கொண்டனர்.

அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது, இதையடுத்து அதே ஆண்டு ஜியானின்னா - செர்ஜியோ திருமணம் செய்து கொண்டனர்.

அடுத்த ஆண்டு தம்பதிக்கு பெஞமின் என்ற மகன் பிறந்தான். பின்னர் ஜியானின்னா - செர்ஜியோ ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் 2012ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதன் பின்னர் செர்ஜியோ பிரபல பாடகி கரினா தெஜிடாவுடன் ஊர் சுற்றும் புகைப்படங்கள் மீடியாவில் பரபரப்பாக வலம் வந்தது.

இதை பார்த்து கோபமடைந்த மரடோனா செர்ஜியோவை பலவீனமானவன் என திட்டினார்.

இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சூழலில் தான் மரடோனாவுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

அதாவது தான் விவாகரத்து செய்த முன்னாள் மனைவி கிளவ்டியா மற்றும் மகள்கள் தனது $4.5 மில்லியன் பணத்தை வங்கியில் இருந்து திருடினார்கள் என மரடோனா குற்றஞ்சாட்டினார், மேலும் அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என ஆவேசப்பட்டார்.

இதன்பின்னர் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

மரடோனா என்ன தான் தன் மீது விமர்சனம் செய்தாலும் அவர் போதை மருந்து பழக்கத்தில் இருந்து விடுபட்டு நலமாக வாழ வேண்டும் என ஜியானின்னா கடந்த ஜூன் மாதம் பேசியிருந்தார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்