சவப்பெட்டியில் வைக்கப்பட்ட மாரடோனா உடலுடன் செல்பி எடுத்த நபருக்கு நேர்ந்த கதி! அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படம்

Report Print Raju Raju in கால்பந்து
514Shares

மறைந்த மாரடோனாவின் சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி அருகில் நின்று செல்பி எடுத்த இறுதிச்சடங்கு கூடத்தின் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அர்ஜண்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் மாரடோனா கடந்த புதன்கிழமை மாரடைப்பால் தூக்கத்திலேயே உயிரிழந்தார்.

மாரடோனாவின் மறைவு உலகெங்கிலும் உள்ள அவரின் ரசிகர்களை பலத்த சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் மாரடோனாவின் சடலம் இறுதிச்சடங்கு கூடத்துக்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டது. முன்னதாக அவர் சடலம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் கட்டை விரல்களை உயர்த்தி காட்டி கொண்டு சடலத்துடன் செல்பி எடுத்து கொண்டார்.

இது தொடர்பான புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து குறித்த ஊழியர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையில் உயிரிழந்த ஜாம்பவானுக்கு இப்படி தான் மரியாதை கொடுப்பதா? செல்பி எடுத்த அந்த நபரிடம் இருந்து அர்ஜண்டினா குடியுரிமையை பறிக்க வேண்டும் என சமூகவலைதளத்தில் பலரும் கோபத்துடன் பதிவிட்டுள்ளனர்.

You May Like This Video

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்