மெஸ்ஸி அல்லது ரொனால்டோ இருவரில் யார் கெத்து...? மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனா அளித்த உறுதியான பதில்

Report Print Basu in கால்பந்து
592Shares

கால்பந்து விளையாட்டில் தற்போது கொடி கட்டி பறக்கும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்ஸி, போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு மறைந்த மரடோனா அளித்த பதில் தற்போது வைரலாகியுள்ளது.

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா புதன்கிழமை தனது 60 வயதில் மாரடைப்பால் இறந்தார்.

மிகச்சிறந்த வீரருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கானோர் ப்யூனோஸ் அயர்ஸில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையில் மெஸ்ஸி அல்லது ரொனால்டோ இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு மறைந்த மரடோனா அளித்த பதில் தற்போது வைரலாகியுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட தனது நாட்டைச் சேர்ந்த மெஸ்ஸியை விரும்புவதாக கூறிய மரடோனா, ரொனால்டோ மிக பயங்கரமான வீரர் என புகழாரம் சூட்டினார்.

மேலும், ரொனால்டோ அர்ஜென்டினாவாக இருக்க வேண்டும் நான் விரும்புகிறேன். அவர் மிக திறமையானவர், ரொனால்டோவை பார்த்தால் அர்ஜென்டினா முன்னாள் வீரர் Gabriel Batistuta எனது நியாபகத்திற்கு வருவார்.

அவர் பந்தைத் தொட்டவுடன், அது கோல் தான் என மரடோனா ரொனால்டோவை புகழ்ந்துள்ளார்.

அர்ஜென்டினா மெஸ்ஸியைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாக கூறிய மரடோனா, மெஸ்ஸி மோசமாக விளையாடுவதை நான் பார்த்ததில்லை.

மெஸ்ஸி அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் என்று அர்ஜென்டினாக்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று மரடோனா கூறினார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்