முதல் டெஸ்டிலேயே உச்சம்: ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்த வீரர்

Report Print Arbin Arbin in கால்பந்து
398Shares

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ரஹானேவினால் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்ட அறிமுக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

அவுஸ்திரேலிய மண்ணில் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய வீரர் ஒருவர் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், அதுதான் சிராஜின் சாதனை.

முதல் இன்னிங்சில் உணவு இடைவேளைக்குப் பிறகு 27 ஓவர்கள் கடந்து களமிறக்கப்பட்ட முகமது சிராஜ் கிடைத்த வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்தி இந்த வெற்றியில் தனது 5 விக்கெட்டுகள் மூலம் பங்களிப்பு செய்துள்ளார்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சிராஜ் 5/77 என்று அபாரமாக வீசியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா திணறிய சமயத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார் சிராஜ்.

உலக அளவில் அவுஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட்டிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் 4வது பந்துவீச்சாளராக சிராஜ் திகழ்கிறார்.

ஐதராபாத்தை சேர்ந்த சிராஜ் அவுஸ்திரேலியாவில் இருக்கும் போது தன் தந்தையின் மரணத்துக்கும் வர முடியாமல் போனது.

இந்நிலையில் கிடைத்த வாய்ப்பை இருகைகளாலும் பற்றிய சிராஜ் முதல் இன்னிங்சில் 3 ஓட்டங்களுக்கும் குறைவாகவும், 2வது இன்னிங்சில் 2 ஓட்டங்களுக்குக் குறைவாகவும் கொடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் அவுஸ்திரேலியாவில் 5 அல்லது அதற்கும் மேல் விக்கெட் வீழ்த்திய விவரம்:

  • இங்கிலாந்தின் பில் டிஃப்ரெய்டாஸ் 5/95, 1986-87 ஆஷஸ் தொடர்
  • இங்கிலாந்தின் அலெக்ஸ் டியூடர் 5/108, 1998-1999 தொடர்.
  • இலங்கையின் லசித் மலிங்கா 6/94 - 2004 தொடர்
  • இந்தியாவின் முகமது சிராஜ் (5/77), 2020 தொடர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்