NEPL போட்டியில் பரபரப்பான இறுதி நேரத்தில் ஆட்டத்தை சமன் செய்த நொர்தேர்ன் எலைட் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

வடகிழக்கு பிறிமியர் லீக் தொடரின் மூன்றாவது போட்டி யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளான தமிழ் யுனைற்றட் எப்.சி அணி மற்றும் நொதேர்ன் எலைட் எப்.சி ஆகிய அணிகள்பலப்பரீட்சை நடத்தின.

முதற்பாதி ஆட்டம்

தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றன.

தமிழ் யுனைற்றட் அணி வீரர் யூட் அவர்கள் அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல்கம்பத்தை நோக்கி பந்துகளை நகர்த்த, நோதேர்ன் எலைட் கோல்காப்பாளர் சந்துரு அற்புதமாக தடுத்து நிறுத்திய வண்ணம் இருந்தார்.

முதற்பாதி ஆட்டத்தின் இறுதி நேரத்தில் கிடைத்த கோணர் வாய்ப்பை தமிழ் யுனைற்றட் வீரர் நேர்த்தியாக உதைக்க அந்தப் பந்து நோதேர்ன் எலைட் பின்கள வீரரில் பட்டு கோல் கம்பத்தினுள் நுளைந்து Own Goal ஆக மாறியது.

முதற் பாதி ஆட்டத்தின் இறுதி இரு நிமிடங்களில் நொதேர்ன் எலைட் அணிக்கு இரு இலகுவான கோல் வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் முன்கள வீரர்கள் அவற்றை தவறவிட்டிருந்தார்கள்.

முதற்பாதி முடிவு:-நொர்தேர்ன்எலைட்0 : 1 தமிழ்யுனைற்றட்

இரண்டாம் பாதி ஆட்டம்

தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் தமிழ் யுனைட்டட் அணி வீரர் யூட் தனது லாவகமாக ஆட்டத்தின் மூலம் மேலும் ஒரு கோலைப் போட தமிழ் யுனைற்றட் 2:0 என முன்னிலை பெற்றது.

எனினும் அதன் சளைக்காது விளையாடிய நொதோன் எலைட் அணி சார்பாக அலெக்ஸ் ஒரு கோலைப் போட ஆட்டம் மேலும் சூடு பிடித்தது.

நொர்தேர்ன் எலைட் சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரகலாதன் அடுத்த கோலைப் போட ஆட்டம் 2:2 என சமனிலை பெற்றது.

தொடர்ந்து இரு அணிகளாலும் எவ்வித கோல்களும் பெற முடியாது போக இறுதியில் 02:02 என ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

ஆட்டநேர முடிவு:- நொர்தேர்ன்எலைட் 2 : 2 தமிழ்யுனைற்றட்

ஆட்டநாயகனாக நொர்தேர்ன் எலைட் வீரர் பிரகலாதன் தெரிவானார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers