அம்பாறை அணியை வீழ்த்திய வல்வை எப்.சி அணிக்கு இலகு வெற்றி!

Report Print Samaran Samaran in கால்பந்து
17Shares
17Shares
ibctamil.com

வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

அன்மையில் நடைபெற்ற லீக் சுற்றின் 39 ஆவது போட்டியில் வல்லை எப்.சி அணியை எதிர்த்து அம்பாறை அவஞ்சேர்ஸ் அணி மோதியது.

போட்டியின் 26, 27 ஆவது நிமிடத்தில் வல்லை எப்.சி அணியின் செ.ஞானரூபன் இரண்டு கோல்களை அடுத்தடுத்து அடித்தார்.

தொடர்ந்து, 47 ஆவது நிமிடத்தில் அம்பாறை அணி பதில் கோல் போட்டது. எனினும் சுதாகரித்தாடிய வல்வை அணி, 78 ஆவது நிமிடத்தில் அடுத்த கோலைப் போட்டது.

அந்தக் கோலையும் ஞானரூபன் போட்டார். 83 ஆவது நிமிடத்தில் வல்வை அணியின் துசிகரன் கோல் ஒன்றைப் போட்டார்.

முடிவில் வல்வை எப்.சி அணி 04:01 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்