அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திய வவுனியா வொறியேர்ஸ்: போராடி தோற்ற லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன்!

Report Print Samaran Samaran in கால்பந்து

IBC தமிழ் நிறுவனத்தால் நடாத்தப்படும் வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட பிரீமியர் லீக் போட்டியின் 10ஆம் சுற்று ஆட்டங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.

துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் ரிங்கோ ரைரன் அணியை எதிர்த்து வவுனியா வொறியேர்ஸ் அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் அணி 03:00 என்ற கோல் கணக்கில் ரிங்கோ ரைரன் அணியை வீழ்த்தி வவுனியா வொறியேர்ஸ் வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் வவுனியா வொறியேர்ஸ் அணி சார்பாக மேனன் (61), ஆதி (70), A.C.M அசாம் 80 ஆவது நிமிடங்களில் தமது அணிக்காக கோல்களை பதிவு செய்தனர்.

ரிங்கோ ரைரன் அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கான தகுதியை இழந்துவிட்டாலும் வவுனியா வொறியேர்ஸ் அணிக்கு இன்றைய போட்டி மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்பட்டது.

காரணம் வவுனியா வொறியேர்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறமுடியும் என்ற நிலையில் இருந்ததால் வவுனியா அணி வீரர்கள் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்