வாழ்வா சாவா போட்டி சமநிலையில் முடிந்தது: அடுத்த சுற்றுக்கு யார் முன்னேறுவார்கள் என எகிற வைக்கும் எதிர்பார்ப்பு!

Report Print Samaran Samaran in கால்பந்து

IBC தமிழ் நிறுவனத்தால் நடாத்தப்படும் வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட பிரீமியர் லீக் போட்டியின் 10ஆம் சுற்று ஆட்டங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.

துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற 2ஆவது போட்டியில் வல்வை FC அணியை எதிர்த்து மன்னார் FC அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் மன்னார் அணியும், வல்வை அணியும் ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொன்டதால் (01:01) போட்டி சமநிலையில் முடிவுற்றது.

இந்த போட்டியில் மன்னார் அணி சார்பாக இசைடீன் 09 ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக ஒரு கோலை பதிவு செய்தார்.

வல்வை அணி சார்பாக பிரேம்குமார் (பீமா) 24 ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக ஒரு கோலை பதிவு செய்தார்.

இந்த இரண்டு கோல்களும் முதல் கால்பாதியாட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டிருந்தன. இரண்டாவது கால்பாதியாட்டத்தில் எவராலும் கோலை பெற முடியவில்லை.

இந்த போட்டியில் வெல்லும் அணி பிளேஓவ் சுற்றுக்குள் இலகுவாக செல்லும் என்பதால் இரு அணிக்கும் மிகவும் முக்கியம் வாய்ந்த போட்டியாக இந்த போட்டி அமைந்திருந்தது.

ஆதலால் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆட்டத்தின் இறுதி நேரத்தில் வல்வை அணியில் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டாலும் வல்வை அணியால் மன்னார் அணியின் கோல் காப்பாளரை தான்டி கோல் அடிக்கமுடியவில்லை.

ஆட்டத்தில் இறுதி நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மன்னார் அணியின் கோல் காப்பாளர் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்