சொந்த பெயரை பயன்படுத்தியது குற்றமா? வேலையை பறிகொடுத்த இளம்பெண்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
சொந்த பெயரை பயன்படுத்தியது குற்றமா? வேலையை பறிகொடுத்த இளம்பெண்

பிரான்ஸ் நாட்டில் சொந்த பெயரை அலுவலகத்தில் பயன்படுத்திய குற்றத்திற்காக இளம்பெண் ஒருவரின் பணி பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள Toulouse என்ற நகரை சேர்ந்த Marion(27) என்ற ஏழை இளம்பெண் பல மாதங்களாக போராடி ஒரு தனியார் நிறுவனத்தில் ‘வணிக உதவி பயிற்சியாளராக’ பணியில் சேர்ந்துள்ளார்.

வேலை கிடைத்து விட்டதே என்ற உற்சாகத்தில் 3 கிழமைகள் கடந்ததும், அவருடைய பெயரே அவருக்கு வினையாக மாறியது.

இந்த இளம்பெண் பணிபுரிந்த இதே அலுவலகத்தில் மற்றொரு பெண்ணும் Marion என்ற அதே பெயரில் மற்றொரு துறையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த அலுவலகத்திற்கு சேவைகளை வழங்கும் வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு பெண்களின் ஒரே பெயரால் குழப்பம் அடைவதாக அந்த அலுவலகத்தின் உரிமையாளருக்கு புகார் வந்துள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து உடனடியாக ஏழை இளம்பெண்ணை அழைத்து, ‘உன்னுடைய பெயரால் நமது வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைகிறார்கள்.

எனவே, Marion என்ற உன்னுடைய பெயரை Marie என மாற்றிக்கொண்டால் இந்த குழப்பம் வராது’ எனக்கூறியுள்ளார்.

ஆனால், உரிமையாளரின் இந்த ஆலோசனையை அந்த ஏழை பெண் ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர், ‘ஒன்று பெயரை மாற்று……அல்லது இந்த அலுவலகத்தை விட்டு போய்விடு’ என மிரட்டியுள்ளார்.

பல மாதங்கள் போராடி கிடைத்த வேலை முக்கியமா? அல்லது, நமது பெற்றோர் வைத்த பெயர் முக்கியமா என தீர ஆலோசித்த அந்த பெண், இறுதியில் பெயர் தான் முக்கியம் எனக் கருதி அந்த வேலையை தூக்கி எறிந்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

தனக்கு நேர்ந்த இந்த அநீதியை எதிர்த்து அவர் அலுவலகம் மீது வழக்கு தொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments