கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை இரண்டாக கடித்து துப்பிய இளம்பெண்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை இரண்டாக கடித்து துப்பிய இளம்பெண்
1047Shares
1047Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவர் தன்னை கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை இரண்டாக கடித்து துப்பிவிட்டு தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு பிரான்ஸில் உள்ள Toulouse நகருக்கு அருகில் Purpan என்ற பகுதியில் 19 வயதான இளம்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.

நேற்றைய தினம் வெளியே சென்றுருந்த அந்த இளம்பெண் மாலை நேரத்தில் தனது வீட்டிற்கு நடைப்பயணமாக சென்றுள்ளார்.

அப்போது, 24 வயதான வாலிபர் ஒருவர் அந்த இளம்பெண்ணிற்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பிறகு தனது அடுக்குமாடி குடியிருப்பை அடைந்த பெண், மேல்தளத்திற்கு செல்வதற்காக அங்குள்ள ‘லிஃப்ட்டில்’ ஏறியுள்ளார்.

பெண்ணை தொடர்ந்து வந்த வாலிபரும் லிஃப்ட்டில் கண் இமைக்கும் நேரத்தில் நுழைந்துள்ளார்.

பெண் தனியாக இருக்கிறார் என்பதை உணர்ந்த அந்த வாலிபர் கண நேரமும் சிந்திக்காமல் பெண் மீது பாய்ந்துள்ளார்.

நடப்பதை உணர்ந்த பெண் தன்னுடைய முழு பலத்தையும் திரட்டி வாலிபரின் பிடியில் இருந்து தப்ப முயன்றுள்ளார்.

ஆனால், வாலிபரின் பலத்தை எதிர்க்கொள்ள முடியாத பெண் ‘இனி தனது பலத்தால் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது’ என நினைத்து அவனது விருப்பத்திற்கு இணங்குவது போல் நாடகமாடியுள்ளார்.

உற்சாகமடைந்த வாலிபர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதுடன் முத்தம் கொடுத்துள்ளார்.

இது தான் தப்பிக்க சரியான தருணம் என தீர்மானித்த பெண், தனது பல முழுவதையும் திரட்டி வாலிபரின் நாக்கை பற்களால் பலமாக கடித்து இரண்டாக துண்டாக்கியுள்ளார்.

கொடூரமான வலியால் துடித்த வாலிபர் லிஃப்ட் நின்றதும் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து புகார் பெற்று பொலிசார் லிஃப்ட்டில் சோதனை செய்தபோது, அங்கு வாலிபரின் துண்டிக்கப்பட்ட பாதி நாக்கு இருந்ததை கண்டு அதனை எடுத்து மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பாதி நாக்குடன் தப்பியுள்ள நபர் நிச்சயமாக அருகில் உள்ள ஏதாவது ஒரு மருத்துவமனைக்கு செல்வார் என்பதால் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனைக்கும் ரகசிய தகவல் அளித்துள்ளனர்.

பொலிசார் எதிர்ப்பார்த்தது போல் பாதி நாக்குடன் மருத்துவமனை ஒன்றிக்கு சென்ற அந்த வாலிபரை பொலிசார் கைது செய்தனர்.

தற்போது வாலிபர் மீது கற்பழிப்பு முயற்சி வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வாலிபரின் பலத்தை தனது புத்தியை பயன்படுத்தி தப்பித்த இளம்பெண்ணின் துணிச்சலை பொலிசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments