1.6 கிலோ மீற்றர் தூரத்துக்கு காமிக் கதை வரைந்து பிரான்ஸ் சாதனை!

Report Print Basu in பிரான்ஸ்
1.6 கிலோ மீற்றர் தூரத்துக்கு காமிக் கதை வரைந்து பிரான்ஸ் சாதனை!

மத்திய பிரான்ஸ் நகரான lyonல் நடந்த காமிக் கண்காட்சி திருவிழாவில், ஒரு ஓவிய குழு கலைஞர்கள் 1.6 கிலோ மீற்றர் நீளமுள்ள கலைப்படைப்புகளை வரைந்து, உலகின் மிக நீளமான காமிக் கதை சாதனையை முறியடித்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு பிரான்ஸ் வசம் இருந்த இந்த சாதனையை, கடந்த 2014 ஆம் ஆண்டு 1.2 கிலோ மீற்றர் நீளம் காமிக் கதை வரைந்து நியூ யார்க் தட்டிச்சென்றது.

தற்போது, 1.6 கிலோ மீற்றர் நீளம் வரைந்து நியூயார்க் வசம் இருந்த சாதனையை பிரான்ஸ் திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

lyon மற்றும் barcelona காமிக் கல்லூரி மாணவர்களால் வரைப்பட்ட ஆயிரக்கணக்கான ஓவியங்களை கொண்டே இந்த காமிக் கதை உருவாக்கியிருக்கிறார்கள்.

lea எனும் பெண் தனக்கு கிடைத்த மந்திர பேனா ஒன்றின் மூலம் கடந்த காலத்துக்கு செல்வது போன்ற ஒரு கதையை இந்த கண்காட்சிக்காக உருவாக்கியுள்ளார்கள்.

இது குறித்து lyon காமிக் கண்காட்சி திருவிழாவின் இயக்குனர் Mathieu Diez கூறுகையில், 1625 மீற்றர், அதாவது ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்துக்கு காமிக்கதை கண்காட்சி வைத்து சாதனை படைத்துள்ளது பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments