பிரஞ்சு ஓட்டுநர்கள் சாலையில் கவனம் செலுத்துவதில்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Report Print Basu in பிரான்ஸ்
பிரஞ்சு ஓட்டுநர்கள்  சாலையில் கவனம் செலுத்துவதில்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பிரான்சில் வாகன ஓட்டிகள் மிக வேகமாக வாகனத்தை ஓட்டுவதுடன் சாலையில் குறைவாகவே கவனம் செலுத்துவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்விலே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆய்வு பாரிஸ் மற்றும் கன் இடையேயான A13 நெடுஞ்சாலையில் நடத்தப்பட்டுள்ளது.

இதில், குறைந்த அளவான கவனத்துடன் வாகன ஓட்டிகள் மிக வேகமாக வாகனத்தை ஓட்டுவது தெரியவந்துள்ளது. மேலும் வேகம் கடந்த ஆண்டுகளை விட சதவீதத்தில் அதிகரித்துள்ளதாகவும் புதிய ஆய்வில் தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு வாகன ஓட்டிகளின் வேகம் சராசரியாக மணிக்கு 129 கிமீ வேகத்தில் இருக்கிறது.கடந்த ஆண்டுகளில் இது 127 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுமார் 140,000 வாகனங்களை கணக்கிட்டதில், அதில் 43 சதவீத வாகனங்கள் 130 கிமீ வேகத்தில் பயணிக்கின்றனர். கடந்த ஆண்டில் இது 37 சதவீதமாக இருந்தது, அதிகபட்ச வேகமான 150 கிமீ வேகத்தை, 4 சதவீதமான ஓட்டுநர்கள் தாண்டுகிறார்கள். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

மற்றொரு ஆய்வில்,பத்தில் ஏழு விபத்துகள் அதிவேகத்தால் ஏற்படுகின்றன என தெியவந்துள்ளது.

மேலும், புதிய ஆய்வின் படி 4.9 சதவீத வாகன ஓட்டிகள் பயணத்தின் போது தொலைபேசிகள் பயன்படுத்துகிறார்கள் என தெரியவந்துள்ளது தொடர்ந்து 22 சதவீத ஓட்டுநர்கள் விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட மே மாதத்தை விடவும் நடப்பு ஆண்டின் மே மாதத்தில் வீதி விபத்து 10.1 சதவீதம் அதிகரித்துள்ளது என சாலை பாதுகாப்பு இயக்கம் தகவல் வெளியிட்டிருந்தது.

விபத்துகளை தவிர்க்கும் முகமாக அரசு தொடர்ச்சியாக புதிய சட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் சிறுவர்கள் வாகனம் ஓடும்போதும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகிறது என புதிய சட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments