பிரித்தானியாவை வெளியேற வலியுறுத்திய முன்னாள் பிரஞ்சு பிரதமர் காலமானார்

Report Print Basu in பிரான்ஸ்
பிரித்தானியாவை வெளியேற வலியுறுத்திய முன்னாள் பிரஞ்சு பிரதமர் காலமானார்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியாவை வெளியேற வலியுறுத்திய முன்னாள் பிரஞ்சு பிரதமர் மிசேல் ரொக்கார்ட் தனது 85 வயதில் காலமானார்.

மிசேல் ரொக்கார்ட், அதிபர் பிராங்கோயிஸ் மிட்டெர்ரன்ட் ஆட்சி காலத்தில் பிரான்ஸ் நாட்டின் பிரதமராக 1988-1991 ஆண்டுகளில் பதவி வகித்தவர்.

ஐரோப்பிர ஒன்றியத்தின் தீவர ஆதரவாளராக திகழந்த மிசேல். 15 வருட ஐரோப்பிய பாராளுமன்ற சேவைக்கு பின் கடந்த 2009ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார்.

இவரது ஆட்சி காலத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ம் ஆண்ட இவர் எழுதிய ஒரு கட்டுரை, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானயா வெளியேறவதற்கு முக்கிய பங்காக திகழ்ந்த்து.

எனினும், மிசேல் ரொக்கார்ட்டின் அறிவுரை படி பிரித்தானியா வெளியேற வேண்டும் என மக்கள் முடிவு வெளியாகி சரியாக 9 நாட்களுக்கு பின் அவர் உயிரிழந்துள்ளார்.

மிசேல் ரொக்கார்ட் தனது 85-வது வயதில் நேற்று காலமானார் என பிரான்ஸ் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments