ரூ.504 கோடி வரி ஏய்ப்பு செய்த கோடீஸ்வரர்: நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
ரூ.504 கோடி வரி ஏய்ப்பு செய்த கோடீஸ்வரர்: நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

பிரான்ஸ் நாட்டில் ரூ.504 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்நாட்டின் மூன்றாவது பெரிய கோடீஸ்வரர் மீதான நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய கோடீஸ்வரரும் செனட் சபை உறுப்பினருமான Serge Dassault(91) என்பவர் மீது தான் இந்த வரி ஏய்ப்பு விசாரணை தொடங்கியுள்ளது.

பாரீஸ் நகருக்கு அருகில் உள்ள Corbeil-Essonnes என்ற நகரின் மேயராக பதயேற்பதற்கு ஏழைகளுக்கு முறைகேடாக பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் மேயராக 14 ஆண்டுகள் பதவி வகித்து வந்துள்ளார்.

இவருடைய தற்போதைய ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு 13.3 பில்லியன் யூரோ ஆகும்.

இந்நிலையில், பல்வேறு பொறுப்புகளை நிர்வகித்தபோது சுமார் 31 மில்லியன் யூரோ(504,85,37,550 இலங்கை ரூபாய்) வரையிலான வரியை அரசு அதிகாரிகளிடம் மறைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

அதேபோல், பல்வேறு துறைகளில் வந்த பல மடங்கு வருவாயையும் இவர் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு தொடர்பிலான முதல் விசாரணை நேற்று நீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கோடீஸ்வரர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments