ஐ.எஸ் இயக்கத்தை அழிக்க பிரான்ஸ் எடுத்துள்ள அதிரடி முடிவு

Report Print Basu in பிரான்ஸ்
ஐ.எஸ் இயக்கத்தை அழிக்க பிரான்ஸ் எடுத்துள்ள அதிரடி முடிவு
2521Shares
2521Shares
ibctamil.com

ஈராக் ராணுவத்திற்கு, பிரான்ஸ் ஆயுதம் வழங்கும் என அந்நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்டே அறிவித்துள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடத்த ஈராக் ராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின்னரே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அடுத்த மாதம் ஈராக் நாட்டு அமைச்சர்களுடன் நடைபெறவுள்ள பேச்சுவர்த்தையை தொடர்ந்து, ஈராக் படைகளுக்கு பயிற்சி அளிக்க ராணுவ ஆலோசகர்கள் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வர்கள் என தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாத இறுதியில் Charles de Gaulle என்ற விமானம் தாங்கியை அனுப்பவுள்ளதாக கூறியுள்ளார்.

பிரான்சினால் வழங்கப்பட உள்ள Charles de Gaulle என்ற விமானம் தாங்கியை பயன்படுத்துவதற்கான இராணுவப் பயிற்சியும் ஈராக்கியப்படைகளிற்கு வழங்கப்பட உள்ளது.

ஆனால், எக்காரணம் கொண்டும் பிரெஞ்சுப் படைகள் இந்தக் களமுனையில் போரில் ஈடுபடமாட்டர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments