விசுவாசமாக இருப்போம்! பிரான்சில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

பிரான்சில் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் தொடர்பான வீடியோவை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரான்சில் தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இருவர் பாதிரியாரை கொன்றனர்.

அதன்பின் நடந்த சண்டையில் இவர்கள் இருவரையும் பொலிசார் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர், இதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில் பாதிரியாரை கொலை செய்த இருவரும், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு விசுவாசமாக இருப்போம் என்ற வீடியோவை பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

தற்போது அந்த வீடியோவை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. எனினும் இந்த வீடியோ எப்போது, யாரால் எடுக்கப்பட்டது, உண்மையானது தானா என பொலிசார் ஆய்வு செய்யவில்லை.

மேலும் தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவரான கெர்மிசே(19), சிரியா சென்று ஐஎஸ் இயக்கத்தில் இணைய மூன்று முறை முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments