பிரான்ஸ் முழுவதும் புர்க்கினி உடைக்கு தடை கோரி நூற்றுக்கணக்கானோர் பேரணி

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
பிரான்ஸ் முழுவதும் புர்க்கினி உடைக்கு தடை கோரி நூற்றுக்கணக்கானோர் பேரணி
760Shares
760Shares
lankasrimarket.com

புர்க்கினி உடைக்கு பிரான்ஸ் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் கடற்கரை நோக்கி பேரணி மேற்கொண்டனர்.

பிரான்சின் தென் பகுதியில் அமைந்துள்ள Palavas கடற்கரையில் குவிந்த 200க்கும் அதிகமான பொதுமக்கள் புர்க்கினி உடைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

சமூகவலைத்தளத்தில் இதுகுறித்து ஆதரவு திரட்டிய ஒரு குழு இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தியதாக உள்ளூர் பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

கடந்த ஒருவாரம் முன்னர் இதுகுறித்து சமூக வலைப்பக்கத்தில் விவாதிக்கப்பட்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பேரணியில் கலந்துகொண்ட சிலர் தெரிவித்துள்ளனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தி வந்த பதாகைகளில், இது மதவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது எனவும், அடிப்படைவாதிகளுக்கு கடற்கரையில் இடமில்லை எனவும் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

பேரணியில் ஒன்று கூடியவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் எனவும் Palavis கடற்கரை ஒட்டியே அவர்களின் குடியிருப்புகளும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பேரணிக்கு அதிகாரிகள் எவரும் தடை விதிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது. அதிகாரிகள் மட்டத்தில் இதுகுறித்து விசாரித்ததில், புர்க்கினி உடைக்கு தடை விதிக்கும் முடிவை அதிகாரிகள் எடுப்பார்கள் எனில் அது கண்டிப்பாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்றனர்.

ஆனால் இதுவரை பிரான்சில் உள்ள 11 நகரங்கள் இந்த உடைக்கு தடை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி புர்க்கினி உடை பிரான்சின் மதிப்புக்கு ஏற்றதாக இல்லை என பிரதமர் மனுவேல் கருத்து தெரிவித்திருந்தார்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் முக்கியமாக கருதப்படுவது நைஸ், கேன்ஸ் ஆகிய மிக பிரபலமான சுற்றுலாத்தலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments