பாரிசின் மத்திய பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுவதாக வெளியான தகவல் புரளியென உறுதியானதை அடுத்து விடுத்துள்ள எச்சரிக்கையை பொலிசார் விலக்கிக் கொண்டுள்ளனர்.
பிரான்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மிகவும் பரபரப்பான Les Halles பகுதியில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட பொலிசார் உடனடியாக குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்துள்ளனர். மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் Saint Gilles தேவாலய பகுதியில் தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் பரவியது. இதனிடையே பொலிசார் தீவிரவாத எச்சரிக்கை செயலி வழியாக பொதுமக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
Gros dispositif de police en train de se mettre en place à Étienne Marcel. pic.twitter.com/mZOWCdjw2q
— Remy Buisine (@RemyBuisine) September 17, 2016
தீவிரவாதி எதிர்ப்பு பொலிசார் மற்றும் சிறப்புப்படையினர் ஒன்றிணைந்து நடத்திய சோதனையில் குறிப்பிட்ட செய்தியானது புரளி என தெரியவந்தது.
இதனையடுத்து பொலிசார் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாத தாக்குதல் குறித்த செய்தி வெளியானதும் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்ததாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் மீது பொலிசார் ஆத்திரப்பட்டதாகவும், ஆனால் போதிய தகவல்களை தர மறுத்துள்ளதாகவும் தெரிய வந்தது.
மட்டுமின்றி மாலை நேரத்தில் வணிக வளாகங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பெரும்பாலானோர் இந்த தகவலால் வீட்டில் முடங்கியதாக கூறப்படுகிறது.