போராட்டத்தில் கண்ணை இழந்த தொழிலாளி: பொலிஸ் மீது வழக்கு பதிய முடிவு

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் ஒரு கண்ணை இழந்த தொழிலாளி ஒருவர் பொலிஸ் மீது வழக்கு பதிய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி சில தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் அதிகளவிலான தொழிலாளர்கள் பங்கேற்றதால் கலவரம் ஏற்படாதவாறு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், போராட்டத்தின்போது சிலர் கலவரத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கலவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிசார் தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

அப்போது, Laurent Theron(46) என்ற தொழிலாளரின் கண்ணில் புகை குண்டு பாய்ந்துள்ளது.

வலியால் அலறி துடித்த அவரை தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரால் ஒரு கண்ணை இனிமேல் பயன்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கண்ணை இழந்த தொழிலாளி இது தொடர்பாக பேசியபோது, ‘போராட்டத்தில் பங்கேற்றாலும் ஒரு ஓரமாக நின்று எனது நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.

எங்களால் பொலிசாருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிந்தும் என் மீது கண்ணீர் புகை குண்டை வீசியுள்ளனர். பொலிசாரின் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடுக்க உள்ளதாக Laurent Theron தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம் தொடர்பாக பொலிசார் பேசியபோது, ‘தொழிலாளர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி கண்ணை இழந்துள்ளதாக தகவல் அறிந்தோம்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தொழிலாளர் பதிவு செய்யவுள்ள வழக்கை சந்திக்க தயார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments