அகதிகளின் செல்போன் மற்றும் காலணிகளை திருடும் பொலிஸ் அதிகாரிகள்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்களின் செல்போன் மற்றும் காலணிகளை அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் திருடி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டில் உள்ள காலைஸ் நகருக்கு அருகில் ’Calais Jungle' என்ற அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

புகலிடம் கோரி வந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இம்முகாமை விட்டு தப்பிக்க முயல்வதும், அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுப்படுவது என அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், பொலிசாரின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாத அகதிகளின் ஸ்மார்ட்போன் மற்றும் காலணிகளை பொலிஸ் அதிகாரிகள் திருடிச்செல்வதாக அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து எரித்திரியா நாட்டை சேர்ந்த அகதி ஒருவர் பேசுகளையில், ‘அதிகாரிகள் எங்களை மிரட்டி செல்போன் மற்றும் காலணிகளை பறித்துக்கொள்கின்றனர்.

செல்போன்கள் இல்லாத காரணத்தினால் எங்களுடைய உறவினர்களுடன் தொடர்பில் இருக்க முடியவில்லை.

மேலும், காலணிகள் இல்லாததால் இந்த ஜங்கள் முகாமை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயே அடைந்து கிடக்கிறோம்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டு பொலிசாரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தொழிலாளர் கட்சியை சேர்ந்த Claude Morae என்பவர் பேசுகளையில், ‘அகதிகள் முகாமில் நடைப்பெற்று வரும் இதுபோன்ற நடவடிக்கைகள் மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

இதனை தடுக்கும் வகையில் பிரான்ஸ் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments