சுற்றுலா பயணியை தாக்கி ரூ.80 லட்சம் மதிப்பிலான கடிகாரம் கொள்ளை

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் சுற்றுலா சென்ற பெண் ஒருவரை தாக்கி ரூ.80 லட்சம் மதிப்பிலான கடிகாரத்தை மர்ம நபர் கொள்ளையிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பாரீஸ் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

நேற்று முன் தினம் இரவு 10/30 மணியளவில் பாரீஸில் உள்ள Champs Elysees இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளார்.

பெண் நிலைகுலைந்த தருணத்தில் அவர் அணிந்திருந்த கடிகாரத்தை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியுள்ளார்.

சுற்றுலா பயணி அணிந்திருந்தது Patek Philippe என்ற பெயருடைய விலை உயரந்த கடிகாரம் ஆகும். இதன் மதிப்பு 50,000 யூரோ(80,46,038) எனக் கூறப்படுகிறது.

சுற்றுலா பயணியிடம் கொள்ளையிட்டுள்ள சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவை சேர்ந்த பிரபல மொடலான கிம் கர்தஷியானை கடத்தில் அவரிடம் இருந்து 10 மில்லியன் யூரோ மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையிட்டு சென்றனர்.

இதே போல், கடந்த ஆகஸ்ட் மாதம் சவுதி அரசு குடும்பத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து 1 மில்லியன் யூரோ மதிப்பிலான கடிகாரத்தை மர்ம நபர்கள் கொள்ளையிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments