மாணவியை மிருகத்தனமாக கொன்ற காவலர்: 21 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் 21 ஆண்டுகளுக்கு முன் மாணவி ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் Legrand Lylian என்ற காவலருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு மே 24ம் திகதி லீல் நகர மையத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 18 வயது மாணவியான Stephanie Fauviaux, சால்வையால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த கொலை வழக்கில், 17 வருடங்கள் நடந்த விசாரணையில் சால்வையில் இருந்தது LeGrand Lylianவின் டிஎன்ஏ என அடையாளம் காணப்பட்டு அவர் தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது.

சம்பவத்தின் போது LeGrand Lylianவுக்கு 23 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த வழக்கில் North Assize நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது, குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட LeGrand Lylianவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தலா 30,000 யூரோ(22 லட்சம்), சகோதரன் மற்றும் சகோதரிக்கு தலா 15,000 யூரோ(11 லட்சம்) வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தற்போது, நைஸ் நகர உதவி அதிகாரியாக பணியாற்றி வரும் LeGrand Lylianனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments