ரூ.8 கோடி மதிப்பிலான கடிகாரங்களை திருடிய மர்ம நபர்கள்: அச்சத்தில் பொதுமக்கள்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள வணிக வளாகத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான கடிகாரங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாரீஸில் Girard-Perregaux என்ற கடிகாரக்கடை இயங்கி வருகிறது. இக்கடையில் விலை உயர்ந்த சுவிஸ் கடிகாரங்கள் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று முன் தினம் தபால் கொண்டு வந்துள்ளதாக இரண்டு நபர்கள் கதவை தட்டியுள்ளனர்.

இதனை உண்மை என நம்பிய கடைக்காரர் கதவை திறந்து விட்டுள்ளார். அப்போது, இருவரில் ஒருவர் திடீரென துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளான்.

மற்றொரு நபர் கண்ணீர் புகை குண்டு வீசி விடுவோம் என மிரட்டியதில் ஊழியர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்.

பின்னர், கடையின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்து 10 கடிகாரங்களை அள்ளிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஊழியருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

இக்கொள்ளை சம்பவத்திற்கு பிறகு வணிக வளாக நிர்வாகி பேசுகையில், கொள்ளையடிக்கப்பட்டுள்ள கடிகாரங்களின் மதிப்பு 5,00,000 யூரோ(8,02,41,028 இலங்கை ரூபாய்) என தெரிவித்துள்ளார்.

வணிக வளாகத்தில் ஆதாரங்களை சேகரித்துள்ள பொலிசார் இரண்டு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் Chopard நகைக்கடையில் புகுந்த நபர்கள் லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை திருடிச்சென்றனர்.

கடந்த மாதம் பாரீஸ் நகருக்கு வருகை தந்த அமெரிக்க பிரபல மொடலான கிம் கர்தாஷியானிடம் சுமார் 10 மில்லியன் டொலர் மதிப்பிலான நகையை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறந்த சுற்றுலா நகரமான பாரீஸில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நிகழ்ந்து வருவது அங்குள்ள பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments