விபச்சார விடுதிக்குள் நுழைய அனுமதி மறுப்பு: பரிதாபமாக பலியான வாடிக்கையாளர்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
985Shares
985Shares
ibctamil.com

பிரான்ஸ் நாட்டில் உள்ள விபச்சார விடுதிக்கு சென்ற நபர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில் உள்ள கேன்னஸ் நகருக்கு அமெரிக்காவை சேர்ந்த 63 வயதான நபர் சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில், இதே நகரில் உள்ள விபச்சார விடுதிக்கு சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.

நள்ளிரவு 1 மணியளவில் சென்ற அவரை விபச்சார விடுதியின் காவலாளி தடுத்து நிறுத்தியுள்ளார்.

‘சில காரணங்களுக்காக உள்ளே அனுமதிக்க முடியாது. திரும்ப சென்றுவிடுங்கள்’ என காவலாளி கூறியுள்ளார்.

ஆனால், இதனை ஏற்காத அந்த நபர் காவலாளி தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காவலாளி நபரை பிடித்து வேகமாக பின்னால் தள்ளியுள்ளார்.

காவலாளியின் முரட்டுத்தனமான தாக்குதலால் நிலைகுலைந்த நபர் படியை விட்டு தவறி கீழே விழுந்துள்ளார்.

ஐந்து மாடிகளை கடந்து கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

வாடிக்கையாளரை எந்த காரணத்திற்காக அனுமதிக்கவில்லை என்பது தெரியவரவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக 42 வயதான காவலாளியை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments