பிரான்சில் கோர விபத்து: ஆறு இளைஞர்கள் உடல் சிதைந்து பலி

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஒரு பெண் உட்பட ஆறு இளைஞர்கள் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Montcenis மாகாணத்தில் உள்ள சாலையிலே இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 20 முதல் 30 வயதுடைய ஒரு பெண் உட்பட ஆறு இளைஞர்கள் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் உடல்களை மீட்டுள்ளனர். எனினும் தற்போது வரை விபத்திற்கான காரணமோ, உயிரிழந்தவர்களின் அடையாளமோ வெளியாகவில்லை.

சமீபத்தில் இதே பகுதியில் நடந்த சாலை விபத்தில் போர்த்துக்கீசர்கள் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்திற்கு பனிப்புயல் தான் காரணம் என பொலிசில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments