மனைவியை கொன்று சடலத்தை மறைத்த கவுன்சிலர் கைது

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் மனைவியை கொலை செய்து சடலத்தை மறைத்த பிரித்தானிய நாட்டு கவுன்சிலர் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த David Turtle(62) மற்றும் Stephanie(50) என்ற தம்பதி இருவர் Bournemouth நகரில் வசித்து வந்துள்ளனர்.

இதே நகரில் உள்ள Kinson North வார்டு கவுன்சிலராக மே 2015 முதல் யூலை 2016 வரை டேவிட் பதவி வகித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள Dordogne நகரில் ஒரு விருந்தினர் இல்லத்தை வாங்குவதற்காக கடந்தாண்டு இருவரும் அந்நாட்டிற்கு பயணமாகியுள்ளனர்.

விருந்தினர் இல்லத்தில் இருவரும் தங்கியிருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மனைவியின் கழுத்தை இறுக்கியபோது அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர், மனைவியின் சடலத்தை வீட்டிற்கு பின்னால் நின்றுருந்த ஒரு பழைய காருக்கு கீழ் புதைத்துள்ளார். மேலும், தனது மனைவி காணாமல் போய்விட்டதாக அவர் பிரான்ஸ் பொலிசாரிடம் புகாரும் அளித்துள்ளார்.

இந்நிலையில், டேவிட்டின் விருந்தினர் இல்லத்தில் தீவிர பரிசோதனை செய்தபோது கடந்த வெள்ளிக்கிழமை அன்று டேவிட் மனைவியின் சடலம் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து டேவிட் பிரான்ஸ் பொலிசாரால் உடனடியாக கைது செய்யப்பட்டார். பொலிசார் விசாரணையில் ‘எதிர்பாராத விபத்தில் மனைவி உயிரிழந்துவிட்டதாக’ அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

டேவிட் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments