அரசுக்கு எதிராக பாலியல் தொழிலாளிகள் போராட்டம்: கோரிக்கை என்ன தெரியுமா?

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எதிராக செயல்படும் அந்நாட்டின் அரசாங்கத்தை கண்டித்து பாலியல் தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அரசு ஒரு அதிரடி சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதன் அடிப்படையில், பாலியல் தொழிலாளிகளுக்கு பணம் கொடுத்து உறவில் ஈடுப்படும் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 3,750 பிராங்க் வரை அபாரதம் விதிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் பாலியல் தொழில் செய்வதற்கு சட்டப்படி அனுமதி உள்ளது.

ஆனால், சாலையில் நின்று வாடிக்கையாளர்களை அழைப்பதற்கும், ஒரு வீட்டை ஏற்பாடு செய்து பாலியல் தொழில் நடத்துவதற்கும் அனுமதி இல்லை.

எனவே, பாலியல் தொழிலாளிகளிடம் செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அரசாங்கம் இச்சட்டத்தை அறிமுகம் செய்தது.

அரசாங்கத்தின் இச்சட்டத்தை திரும்ப பெற கோரி கடந்த சனிக்கிழமை அன்று பாரீஸில் பாலியல் தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பாரீஸில் பாலியல் தொழிலுக்கும் புகழ்பெற்ற Place Pigalle என்ற இடத்தில் இப்போராட்டம் நடைபெற்றது.

‘பாலியல் தொழிலும் ஒரு பணி தான். இதனை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை தடை செய்ய வேண்டும்’ என பாலியல் தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேச அளவில் பாலியல் தொழிலாளிகளுக்கு பணம் கொடுத்து உறவு கொள்வதற்கு முதன் முறையாக கடந்த 1999-ம் ஆண்டு சுவீடன் நாடு சட்டப்பூர்வமாக தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments