பிரான்ஸில் ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சி? 2 தீவிரவாதிகள் கைது

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் இரு இஸ்லாமியவாதத் தீவிரவாதிகளை பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

பிரான்ஸின் தென்பகுதி நகரான மார்செயில் நட்த்தப்பட்ட சோதனைகளின்போது, துப்பாக்கிகளும், குண்டு தயாரிக்க உதவும் ரசாயனப் பொருட்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இநத் ஆயுதங்களை வைத்து ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டிருந்த Clement Baur, Mahiedine Merabet ஆகியோரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிரெஞ்சு உள்துறை அமைச்சர் மத்தியாஸ் ஃபெக்கல் கூறியதாவது, உடனடியாக தாக்குதல் நடத்தப்படவிருந்தது முறியடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஜனாதிபதி வேட்பாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை மோன்ப்பெய்யர் நகரில் நடக்கவுள்ள மத்திய வலது சாரி வேட்பாளர், பிரான்சுவா ஃபியோனுக்கு ஆதரவான தேர்தல் பேரணியில் பொலிசார் நிலை நிறுத்தப்படுவார்கள் .

சந்தேக நபர்களின் புகைப்படங்கள், ஞாயிறன்று நடக்கவுள்ள முதல் சுற்றுத் தேர்தலில் முன்னணி வேட்பாளர்களான, எம்மானுவேல் மேக்ரோன் மற்றும் மரின் லெ பென் ஆகியோருக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments