பிரான்ஸ் நாட்டின் ஜானாதிபதியானார் இமானுவேல் மேக்ரான்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தலில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்றுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குபதிவு கடந்த மாதம் 23-ஆம் திகதி நடைபெற்றது.

இதில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மேக்ரோங்-கும், தீவிர வலதுசாரி தேசியவாத தலைவர் மரைன் லெ பென்னும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இறுதி சுற்றுக்கான வாக்குபதிவு இன்று தொடங்கி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அதற்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

இந்நிலையில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மேக்ரான் 65 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்று பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தீவிர வலதுசாரி தேசியவாத தலைவர் மரைன் லெ பென் 35 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளார். இம்மானுவேல் மேக்ரானின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments