நடுரோட்டில் பெண் வேட்பாளர் மீது தாக்குதல்: பிரான்சில் சம்பவம்

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிடும் Nathalie Kosciusko (44) நேற்று துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

அப்போது சாலை ஓரத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் Nathalie மீது தாக்குதல் நடத்தியதுடன், கையில் கட்டு கட்டாக வைத்திருந்த துண்டு பிரசுரங்களை எடுத்து Nathalie மீது வீசியுள்ளார்.

திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன Nathalie சாலையில் மயங்கி விழுந்தார்.

இதன்பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ள நிலையில் பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்போது பாரீஸ் மேயராக இருக்கும் Anne Hidalgoவை கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர் Nathalie என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments