திருமண விழாவில் மாயமான சிறுமி: குடும்ப நபர்களால் கடத்தப்பட்டாரா?

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் திருமண விழாவின்போது 9 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் குடும்ப உறுப்பினர்கள் மீது சந்தேகம் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரான்சின் Isère பகுதியில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற திருமண விழாவின்போது 9 வயது சிறுமி Maëlys De Araujo மாயமானார்.

சிறுமியை அந்த விழா நடைபெற்ற பகுதி முழுவதும் தேடிய பின்னரும் காணவில்லை என்பதால் குறித்த சிறுமியின் பெற்றோர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக பொலிசார் ஹெலிகொப்டர் பயன்படுத்தி அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் சிறுமியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் குறித்த திருமண விழாவில் பங்கேற்ற 180 விருந்தினர்களையும் பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தினர். மட்டுமின்றி மோப்ப நாய்களை பயன்படுத்தி தேடியும் பொலிசாருக்கு எவ்வித தடயமும் சிக்கவில்லை.

சிறுமி மாயமாகி 48 மணி நேரமாகியும் இந்த விவகாரத்தில் உறுதியான எந்த பதிலும் பொலிசார் தரப்பில் இருந்து சிறுமியின் பெற்றோருக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி சந்தேக நபர்கள் என எவரையும் பொலிசார் இதுவரை கைது செய்யவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சிறுமியின் குடும்ப உறுப்பினர்களின் குற்றவியல் தொடர்பான ரேகைகளை சேகரிக்க பொலிசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிறுமி தொடர்பாக இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், சம்பவத்தன்று சிறுமி ஏதேனும் விபத்தில் சிக்கியிருக்கலாம் அல்லது அவருக்கு பரிச்சயமான நபர்களுடன் தலைமறைவாகியிருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக பொதுமக்களும் தங்களுக்கு தெரியவரும் தகவல்களை பொலிசாருக்கு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers