பிரான்ஸ் பாடசாலைகளில் அமுலுக்கு வரவிருக்கும் முக்கிய தடை

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பாடசாலைகளில் மாணவர்களின் மொபைல் போன் பயன்பாட்டிற்கு ஏன் தடை விதிக்க கூடாது என பொதுவிவாதம் நடத்த கல்வித்துறை அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரான்ஸ் கல்வித்துறை அமைச்சர் Jean-Michel Blanquer தனியார் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், பாடசாலை மாணவர்கள் வகுப்புக்கு செல்லும் முன் அவர்களது மொபைல் போன்களை பாதுகாப்பான பெட்டிகளில் வைத்துவிட்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

முக்கிய அமைச்சரவை கூட்டங்களில் கூட அமைச்சர்கள் இதே முறையை பின்பற்றி வருவதாகவும், இது அனைவருக்கும் பொருந்தும் விடயமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின்போது தனது தேர்தல் அறிக்கையில் மேக்ரான் இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார்.

அதில் பிரான்சில் உள்ள அனைத்து துவக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளில் மொபைல் போனுக்கு தடை விதிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் பாடசாலைகளில் மொபைல் போன் பயன்பாடு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் பெரும்பாலான மக்கள் அந்ததடையை மீறி வருவதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மொபைல் போன் பயன்பாடு மாணவர்களின் கவனத்தை சிதைப்பதாக கூறும் ஆசிரியர்கள் இது ஒழுக்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்க Peep எனும் குழுவானது குறித்த தடை விதிப்பு என்பது சந்தேகமே என தெரிவித்துள்ளது. மட்டுமின்றி தற்போதைய சூழலில் இந்த தடையானது சாத்தியம் இல்லை எனவும் அந்த குழு தெரிவித்துள்ளது.

600 மாணவர்கள் கொண்ட ஒரு உயர்நிலை பள்ளியில் அத்தனை மாணவர்களின் மொபைல் போன்களையும் எப்படி பாதுகாப்பார்கள்? பெட்டியில் அடைத்தா எனவும் Peep குழுவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Peep குழுவானது பிரான்சில் உள்ள மொத்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களை கொண்டுள்ள குழுவாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்