அகதிகளுக்கு இந்த விடயத்தில் உதவுங்கள்: அரசுக்கு வலியுறுத்தல்

Report Print Raju Raju in பிரான்ஸ்
161Shares
161Shares
lankasrimarket.com

பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வாழும் அகதிகள் கால்பந்து விளையாட்டு விளையாட அரசுகள் மற்றும் கால்பந்து கூட்டமைப்புகள் ஊக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பிரைட்டன் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மற்றும் சேவை மேலாண்மை துறையில் பணிபுரிந்து வரும் Mark Doidge அளித்துள்ள பேட்டியில், அகதிகளுக்கு கால்பந்து விளையாட அதிகளவில் வாய்ப்பளிக்க வேண்டும்.

கூட்டாக சேர்ந்து விளையாடும் கால்பந்தை அகதிகள் விளையாடினால் அது அவர்களின் ஒற்றுமையை அதிகரிக்கும்.

நான் சமீபத்தில் வடக்கு பிரான்ஸில் உள்ள அகதிகள் முகாமிற்கு சென்றேன், சுகாதாரமே இல்லாமல் குப்பையாக அகதிகள் வாழும் இடம் காட்சியளித்தது.

அந்த கடினமான சூழலிலும், அங்குள்ள சிறுவர்கள் பலர் தங்களிடமிருந்த பந்துகளை வைத்து மகிழ்ச்சியாக கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் கால்பந்து ஆர்வம் இருப்பதை எனக்கு அது உணர்த்தியது, கால்பந்து குறித்த முக்கிய விடயங்கள் மற்றும் பிரபல வீரர்களின் பெயர்களை அவர்களிடம் கூறி ஊக்கப்படுத்த என் மனதில் தோன்றியது.

கால்பந்து அகதிகளின் எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வு என நான் கூறவில்லை, ஆனால் அவர்களின் நிம்மதிக்கு அது உதவுகிறது.

ஆகவே, கால்பந்து விளையாட்டில் அகதிகள் ஈடுபட அரசு, கால்பந்து கிளப்புகள், கூட்டமைப்புகள் மற்றும் ரசிகர்கள் உதவ முன்வரவேண்டும் என Doidge வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்