பயங்கரவாத தொடர்புடைய நபர் பிரான்சில் பொலிஸ் அதிகாரியாக தெரிவு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
422Shares
422Shares
lankasrimarket.com

பிரான்சில் மத அடிப்படைவாதிகளுடன் தொடர்பு மற்றும் பயங்கரவாத தொடர்புடைய நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரியாக தெரிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெயர் வெளியிடப்படாத குறித்த நபர் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்தே, இஸ்லாமிய மத அடிப்படைவாதி என்ற கோணத்தில் பிரான்ஸ் உளவுப்பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பிரான்ஸ் உளவுத்திறை தம்மை கண்காணிப்பது தெரியாமல் குறித்த நபர் ராணுவத்தில் இணைந்து சேவையாற்றும் பொருட்டு விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் ராணுவம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இதனையடுத்து பொலிஸ் துறையில் பணியாற்ற வேண்டி விண்ணப்பித்துள்ளார்.

பிரான்ஸ் உளவு அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்துவரும் நபர் என அறிந்தும் அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட பொலிஸ் துறை அவரை Adjoint de Securité என்ற பிரிவில் பணியமர்த்தியது.

குறித்த பதவியானது நகரில் ரோந்துப்பணிகளில் ஈடுபடுவது, அலுவலகத்தில் நிர்வாக ரீதியில் கடமைகள் ஆற்றுவது உள்ளிட்டவையாகும்.

இதனிடையே குறித்த நபரின் நடவடிக்கைகள் குறித்து உளவுப்பிரிவு மீண்டும் தகவல்கள் திரட்டி பிரான்சின் உள்விவகாரத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் அவர் எவ்வித பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடாதவர் என உரிய அதிகாரிகளுக்கு உறுதியானதால் பொலிஸ் அதிகாரியாக தொடரவும் தேவையான பயிற்சிகளை வழங்கவும் உள்விவகாரத்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

பிரான்சில் நவம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது பொலிஸ், மற்றும் எஞ்சிய பாதுகாப்பு துறையில் விண்ணப்பிக்கும் நபர்களின் பின்னணியை கடுமையாக ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்