பிரான்ஸில் பெட்ரோல் தட்டுப்பாடு பிரச்சனை: பீதியில் வாகன ஓட்டிகள்

Report Print Raju Raju in பிரான்ஸ்
165Shares
165Shares
Seylon Bank Promotion

அரசின் பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து லொறி ஓட்டுனர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பிரான்ஸில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

பிரான்ஸ் அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து லொறி ஓட்டுனர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதன் காரணமாக நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் எங்கெங்கு உள்ளது என தெரிவிக்கக்கூடிய Essence செயலி சார்பில் பேசிய நபர், 149 பெட்ரோல் நிலையங்களில் சுத்தமாக எரிவாயு தீர்ந்துள்ளது, 235 நிலையங்களில் எரிவாயு தீர்ந்து போகும் நிலையில் உள்ளது.

வாகன ஓட்டிகள் எரிவாயு கிடைக்கவே கிடைக்காது என பயப்படுவதால் முன்னெச்சரிக்கையாக அதிகளவு எரிவாயுவை வாகனத்துக்கு போட்டு கொள்கிறார்கள்.

இப்படி எல்லோரும் செய்தால் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சனை அதிகரிக்கவே செய்யும் என கூறிய அவர் லொறி ஓட்டுனர்கள் போராட்டம் இன்னும் சில தினங்கள் தொடர்ந்தால் எரிவாயு தட்டுப்பாடு பிரான்ஸில் பெரிய பிரச்சனையாக உருவாகும் என தெரிவித்துள்ளார்.

தேசிய தொழிற்சங்க மையமான CGT-ன் தலைவர் Jerome கூறுகையில், பொலிசாரின் மிரட்டல்களுக்கு லொறி ஓட்டுனர்கள் பயப்பட மாட்டார்கள்.

அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் உடன்பட தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையில், போக்குவரத்து துறை சார்பில் தொழிற்சங்க தலைவர்களுடன் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்