ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்த மகனுக்கு உதவிய தாய்: நீதிமன்றம் அளித்த தண்டனை என்ன?

Report Print Raju Raju in பிரான்ஸ்
483Shares
483Shares
lankasrimarket.com

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த மகனுக்கு பண உதவி செய்த தாய்க்கு பிரான்ஸ் நீதிமன்றம் இரண்டாண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரான்ஸை சேர்ந்தவர் Nathalie Haddadi (43), இவர் மகன் Belabbas Bounaga சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், மகனுக்கு Nathalie € 2,000 பணத்தை செலவுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக Nathalie-ஐ கைது செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

Belabbas மலேசியாவுக்கு சுற்றுலா சென்றதாகவும், அங்கு அவன் உதவிக்கு தான் பணம் அனுப்பியதாகவும் Nathalie நீதிமன்றத்தில் கூறினார்.

அதன் பின்னர் Belabbas சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால், Nathalie மீதான குற்றங்கள் நிரூபிக்கபட்டதால் அவருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையில், ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்த Belabbas உயிரிழந்து விட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்