அரசு விழாவில் அரை நிர்வாணமாக பங்கேற்ற அழகிகள்: சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகள்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
404Shares
404Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டில் அரசு விழா ஒன்றில் அரை நிர்வாணமாக மொடல் அழகிகள் பங்கேற்றுள்ள சம்பவம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய பிரான்ஸில் உள்ள Luynes என்ற நகரில் அரசு சார்பில் புதிய நீர் சுத்திகரிப்பு மையம் திறக்கும் விழா நடந்துள்ளது.

இந்த விழாவில் நகர மேயர் உள்பட முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

விழா தொடக்கத்தின்போது ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சி நடந்துள்ளது.

அப்போது, இரண்டு மொடல் அழகிகள் அரை நிர்வாண ஆடைகளுடன் அதிகாரிகளுக்கு அருகில் நின்றுள்ளனர்.

இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டதும் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

‘அரசு விழாவில் அரை நிர்வாணமாக பெண்களை பங்கேற்ற அனுமதி அளித்தது அவசியமற்றது’ என சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.

‘ஆண்களை நாகரீகமாகவும் பெண்களை ஆபாசமாகவும் காட்டியுள்ள அரசு பெண்கள் சம உரிமையை பற்ற எதற்கு பேச வேண்டும்’ என சிலர் கண்டித்துள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அரசு அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

‘விழாவில் அரசு அதிகாரிகள், உள்ளூர் இசை கலைஞர்கள், நடிகைகள் என அனைத்து தரப்பினருக்கும் அழைப்பிதல் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பங்கேற்ற இரண்டு நடிகைகளும் ஏதேச்சையான ஆடைகளுடன் பங்கேற்றனர். இது முன்னரே திட்டமிடப்படவில்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்