சட்டவிரோதமாக தங்கும் அகதிகள்: அரசு மேற்கொண்ட சிறப்பான உதவி

Report Print Raju Raju in பிரான்ஸ்
154Shares
154Shares
Promotion

சட்டவிரோதமாக அகதிகள் தங்குவதை தடுக்க பிரான்ஸின் முக்கிய பகுதியில் அகதிகள் குடியிருப்பு மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பல அகதிகள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸின் Cergy-Pontoise நகரில் அரசுக்கு சொந்தமான ஸ்கேட்டிங் விளையாடும் மையம் அமைந்துள்ளது.

இது அகதிகள் குடியிருப்பு மையமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம் Cergy பகுதிக்கு அருகில் உள்ள Porte de la Chapelle என்ற இடத்தில் சட்டவிரோதமாக அகதிகள் தங்குவது தொடர்கதையாகி வருகிறது.

இதை தடுக்கவே சட்டபூர்வமான இடத்தில் குடியிருப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் இங்கு 50-க்கும் மேற்பட்ட அகதிகள் வந்துள்ளார்கள்.

பத்துநாட்கள் அகதிகள் இங்கு தங்கவைக்கப்படுவார்கள், அவர்களிடம் புலம்பெயர்வது குறித்த ஆவணங்கள், விண்ணப்பங்கள் ஆகியவை வழங்கப்பட்டு அதிகாரிகள் அவர்களை சோதனை செய்வார்கள்.

பின்னர், அகதிகள் அனைவரும் பிரான்ஸில் உள்ள பல்வேறு அகதிகள் முகாமிற்கு அனுப்பபடுவார்கள் என அரசு அதிகாரி Pascal Mertz கூறியுள்ளார்.

வேறு ஐரோப்பிய நாடுகளில் குடியேற அகதிகள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால் அதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு குறித்த நாட்டுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் Pascal தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்