பிரான்ஸில் குறைந்த வேலையில்லா திண்டாட்ட பிரச்சனை: அரசு அறிக்கை

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்சில் வேலையில்லாத திண்டாட்டம் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரான்ஸ் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாதம் 64,800 பேர் வேலையில்லாமல் உள்ளதாக அரசு பதிவேட்டில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குறைவான எண்ணிக்கையாகும்.

இதனால் நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 3.475 மில்லியனாக குறைந்துள்ளது.

இது நாட்டில் பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதையே காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் வேலையின்மை பிரச்சனை 0.5 சதவீதம் குறைந்து வருவதாகவும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தான் அறிமுகப்படுத்திய புதிய தொழிலாளர் குறியீடு மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தம் மூலம் வேலையின்மை விடயத்தில் அடுத்த இரண்டாண்டுகளில் பெரிய மாற்றம் வரும் என கூறியிருந்தார்.

மேலும், தற்போது 9.7 சதவீதமாக உள்ள வேலையின்மை பிரச்சனையை குறைப்பேன் எனவும், அதற்காக 15 பில்லியன் யூரோக்களை வேலை தேடுவோருக்கு பயிற்சியளிக்க ஒதுக்குவேன் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers