அகதிகளுக்கு சமூக ஆர்வலர்கள் செய்த நெகிழ்ச்சி உதவி

Report Print Raju Raju in பிரான்ஸ்

வடக்கு பிரான்ஸில் வசிக்கும் அகதிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சமூக ஆர்வலர்கள் வழங்கியுள்ளனர்.

Stand Up To Racism என்ற தன்னார்வ நிறுவனத்தை சேந்த சமூக ஆர்வலர்கள் Care4Calais என்ற பிரான்ஸில் செயல்படும் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து இச்செயலை மேற்க்கொண்டார்கள்.

குளிர்காலமான இச்சமயத்தில், அங்கு வசிக்கும் அகதிகளுக்கு நன்கொடைகள் மற்றும் பல்வேறு உதவிகளை ஆர்வலர்கள் வழங்கினார்கள்.

சமூக ஆர்வலர் ஆண்டி பிரவுன் கூறுகையில், இங்கு வசிக்கும் மக்களை அவர்களின் வசிப்பிடத்திலிருந்து வெளியேற்ற பொலிசார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

அகதிகளின் தலையணை மற்றும் படுக்கைகளை பறிமுதல் செய்வது, அதன் மீது ரசாயனத்தை ஊற்றுவது போன்ற செயல்களையும் பொலிசார் செய்வதாக கூறியுள்ளார்.

அகதிகளிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட நேர்காணலில், அதிகரித்து வரும் பொலிசாரின் அடக்குமுறையால் உடல் மற்றும் மன நல ஆபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்