இந்த மாதத்தில் பிரான்சில் ஏற்படப் போகும் மாற்றங்கள்: பொதுமக்களின் கவனத்திற்கு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் இந்த நவம்பர் மாதம் மருத்துவருக்கான கட்டணம், முதியோருக்கான உதவித்தொகை உள்ளிட்டவையில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நவம்பர் மாதம் பிரான்சில் தீவிர நோயாளிகளுக்கான மருத்துவ கட்டணம் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது.

பொதுவான நோய்களுக்கு மருத்துவர்கள் கட்டணமாக 25 யூரோ வசூலிக்கும் நிலையில், ஆஸ்துமா, நரம்பியல் தொடர்பான நோய்கள், உணவு தொடர்பான நோய்கள் உள்ளிட்டவைகளுக்கு இனிமேல் 45 முதல் 60 யூரோ வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

இதே போன்று முதியோருக்கான உதவித்தொகை பெறுவதிலும் இந்த மாதத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

50 முதல் 53 வயதுடையவர்கள் அதிகபட்சமாக 2 ஆண்டுகளுக்கான உதவித்தொகைக்கு கோரலாம். 53 மற்றும் 54 வயதுடையவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கான உதவித்தொகைக்கு கோரலாம். மட்டுமின்றி 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3 ஆண்டுகளுக்கான உதவித்தொகை பெற கோரலாம்.

கடந்த காலங்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் 3 ஆண்டுகளுக்கான உதவித்தொகைக்கு கோரலாம் என இருந்தது தற்போது மாற்றப்பட்டுள்ளது.

திருமணமாகாமல் சேர்ந்து வாழும் ஜோடிகள் கண்டிப்பாக உரிய விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு உறுதி அளிக்க வேண்டும்.

முன்னதாக குறித்த சேவையானது மாவட்ட நீதிமன்றங்களில் வழங்கப்பட்டு வந்தது, தற்போது அது டவுன் ஹாலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நவம்பர் 19 ஆம் திகதி முதல் பிரான்ஸ் தபால் சேவையானது ஞாயிற்றுக்கிழமைகளிலும் முக்கியமான 14 நகரங்களில் பார்சல் சேவையை செயல்படுத்த உள்ளது. இச்சேவை 2018 முதல் நாட்டின் அனைத்துப்பகுதிக்கும் விரிவு படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.

மேலும், சொந்தமாக வாகனம் வாங்கியவர்கள் உடனடியாக பதிவு சான்றிதழலை பெற்றுக்கொள்ள பணித்துள்ளனர். மட்டுமின்றி நவம்பர் 6 ஆம் திகதியில் இருந்து வாகனம் வாங்கும் உரிமையாளர்கள் இணையம் வழியாகவே பதிவு செய்ய வேண்டும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்