பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம்: அதிரடியாக முறியடித்த பொலிசார்

Report Print Raju Raju in பிரான்ஸ்
141Shares
141Shares
lankasrimarket.com

பிரான்ஸின் முக்கிய இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் பத்து பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த பத்து பேரை தான் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் பிரான்ஸின் Menton, aix en மற்றும் பாரீஸின் புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டெலிகிராம் எனப்படும் மெசேஜ் அனுப்பு செயலி மூலம் கைதானவர்கள் ஒருவருக்கொருவர் தாக்குதல் திட்டம் குறித்து பேசியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த நபர் ஒருவர் டெலிகிராம் செயலி மூலம் பிரான்ஸில் உள்ள நபர்களிடம் தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதை பொலிசார் முன்னரே உறுதி செய்தனர்.

தாக்குதல் நடத்த தயாராகி கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் காரணமாகவே பத்து பேரை கைது செய்ததாக கூறியுள்ள பொலிசார், வன்முறை செயல்கள் குறித்து கைதானவர்கள் தீட்டிய திட்டம் பற்றி முழுமையாக கூற மறுத்துவிட்டனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்