ரயில் மோதி துண்டாக சிதறிய உடல்: நீதி கேட்டு குடும்பத்தினர் போராட்டம்

Report Print Raju Raju in பிரான்ஸ்
137Shares

பிரான்சில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த நபரின் உடலை புதைக்க முடியாத சூழல் உள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்தார் நாளை போராட்டம் நடத்தவுள்ளனர்.

பிரான்ஸின் Gironde பகுதியில் உள்ள La Reole ரயில் நிலைய தண்டவாளத்தில் கடந்த மாதம் பவுல் மசிடோ என்ற நபர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தார்.

பவுல் உயிரிந்தது யாருக்குமே தெரியாமல் இருந்த நிலையில் குடும்பத்தார் தேடி வந்தனர்.

பின்னர் அவர் சடலம் கைப்பற்றப்பட்டது, பவுல் மீது குறித்த ரயில் மோதிய பின்னரும் அவர் உடல் தண்டவாளத்திலேயே கிடந்ததால் அங்கு சென்ற பல ரயில்கள் உடல் மீது மோதி உடல்பாகங்கள் துண்டாகி சிதறியுள்ளது.

ஆனால் அதிகாரிகள் உடல் பாகங்களை எடுக்காத நிலையில் பவுலின் குடும்பத்தாரே அதை எடுத்துள்ளனர்.

ஆனாலும், பவுலின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யமுடியாத நிலை அவர் குடும்பத்தாருக்கு ஏற்பட்டுள்ளது.

காரணம், பவுலின் உடலை ஆய்வு செய்ய பரிசோதனை கூடத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் அவர் குடும்பத்தார் இன்னும் உடல் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள்.

இது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, இப்படி தாங்கள் நடத்தப்படுவதற்கு நீதி கேட்க பவுலின் குடும்பத்தார் Tribunal d'instance நீதிமன்றத்துக்கு முன்னால் அணிவகுப்பு நடத்தி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

இது நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்