பிரான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தானியிங்கி வேன் ஒன்று, சோதனை செய்யபட்ட 1 மணிநேரத்தில்லே விபத்துள்ளானதால், தானியங்கி வாகனங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தானியங்கி வாகனங்களை சாலைகளில் இயக்குவதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளதுடன், தங்கள் ஊரில் இந்த வாகனம் ஓட்டுவதற்கு சாதகமான சாலைகள் இருக்கும் எனில் பயன்பாட்டிற்கு கொண்டுவரலாம் என்று அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.
இதனால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நவ்யா என்ற நிறுவனம் தயாரித்த தானியங்கி வேன், அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இயக்க திட்டமிட்டிருந்தது.
இதையடுத்து அந்த நகரில் 2 வாரத்துக்கு வாகனங்கள் செல்லும் சாலைகளில் சோதனை ஓட்டம் நடத்தி விட்டு பின்னர் முழுமையாக இயக்க முடிவு செய்யப்பட்டதால், இதற்கான சோதனை ஓட்டம் அங்கு நடத்தப்பட்டது.
வேனில் 12 பயணிகள் அமர்ந்திருந்தனர். மணிக்கு 45 கி.மீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த வேன், 25 கி.மீற்றர் வேகத்தில் செல்லும் படி வைக்கப்பட்டிருந்தது.
சுமார் ஒருமணி நேரம் வேன் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் அந்த வழியாக வந்த லாரி மீது தானியங்கி வேன் மோதியதால் விபத்து ஏற்பட்டது. ஆனால் உள்ளே இருந்த பயணிகளுக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.
இது குறித்து தானியங்கி வேன் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், லாரியை ஓட்டி வந்த டிரைவரின் தவறால் தான் இந்த விபத்து ஏற்பட்டது. தானியங்கி வேனின் மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளனர்.
இருப்பினும் முதல் சோதனை ஓட்டத்திலேயே வாகனம் விபத்தில் சிக்கியிருப்பது பின்னடைவை ஏற்படுத்திருப்பதாகவும், இதனால் தானியங்கி வாகனங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.