மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் Paris Beauvais Airport

Report Print Kabilan in பிரான்ஸ்
146Shares
146Shares
lankasrimarket.com

பிரான்சின் Paris Beauvais விமான நிலையம் உலகின் மோசமான பத்து விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Paris Beauvais விமான நிலையம், ‘Sleeping at Airports' என்னும் சுற்றுலா வலைதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஒன்பதாவது இடம் பெற்றுள்ளது.

இந்த விமான நிலையத்திற்கு முன்பாக உஸ்பெகிஸ்தானின் டஸ்கெண்ட், நேபாளத்தின் காத்மண்டு திரிபுவன் மற்றும் வெனிசுலாவின் காரகாஸ் சைமன் பொலிவர் ஆகிய விமான நிலையங்கள் பட்டியலில் உள்ளன.

விமான நிலையத்தில் உள்ள முனையத்தின் தோற்றம், பயணிகளின் மீதுள்ள அக்கறையை காட்டும் வகையில் இல்லாமல் அவர்களை பாதிக்கும் வகையில் இருப்பதே இந்த பட்டியலில் Beauvais விமான நிலையம் இடம் பெற காரணமாகும் என அந்த வலைதளம் தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து விமான நிலையங்களும் வசதி, சேவைகள், உணவு வகைகள், தங்குமிடம், பாதுகாப்பு, வாடிக்கையாளர் சேவைகள், தூய்மை, போக்குவரத்து, தூங்கும் வசதி ஆகிய பிரிவுகளின் மூலமே இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த விமான நிலையங்களுக்கு செல்லும் முன், நீங்கள் வகுக்கும் சரியான திட்டமிடல் தான் உங்களின் பயண நேரத்தை இனிமையானதாக மாற்றும் என அந்த வலைதளம் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்