சவுதிக்கு திடீர் விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி: காரணம் இது தான்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
301Shares
301Shares
lankasrimarket.com

பிரான்ஸ் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரான் முன்கூட்டியே திட்டமிடாமல் சவுதி நாட்டிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதியில் உள்ள ரியாத் விமான நிலையத்திற்கு நேற்று வந்த பிரான்ஸ் ஜனாதிபதியை சவுதி இளவரசரான முகமது பின் சல்மான் வரவேற்றுள்ளார்.

சவுதி, ஏமன் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் யுத்தத்தை நிறுத்த இம்மானுவேல் மேக்ரான் பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.

லெபனான் நாட்டின் பிரதமரான சாட் ஹரிரி சவுதியில் தங்கியிருந்தபோது கடந்த சனிக்கிழமை அன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

‘லெபனான் நாட்டில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக’ அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதே சமயம், சவுதி அரசு லெபனான் பிரதமருக்கு கொடுத்த நெருக்கடி காரணமாக தான் அவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற ஒரு அசாதாரண சூழலில் முன்கூட்டியே திட்டமிடாமல் பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று சவுதிக்கு பயணமாகியுள்ளார்.

இப்பயணம் குறித்து இம்மானுவேல் மேக்ரான் பேசியபோது ‘லெபனான் நாட்டின் முன்னாள் பிரதமருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்து வருகிறேன்.

சவுதி, லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் யுத்தத்தை தடுக்க முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுப்பட உள்ளதாகவும் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்