பாரீஸ் தாக்குதல் இரண்டாம் ஆண்டு அனுசரிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
96Shares
96Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக இன்று நாடு முழுவதும் இரண்டாவது ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 13-ம் திகதி கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் 130 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தாக்குதல் நிகழ்ந்த நாள் முதல் கடந்த வாரம் வரை பிரான்ஸில் அவசரநிலை அமுலில் இருந்து வந்தது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் இன்று இரண்டாவது ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் இன்றளவும் தொடர்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளது.

மேலும், தீவிரவாதிகளாக சந்தேகப்படும் நபர்களை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முக்கிய இடங்கில் கடுமையான பாதுகாப்பு முன்னெச்சிரிக்கை எடுத்துள்ளதாகவும், நவீன துப்பாக்கிகள் ஏந்திய பொலிசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்